LATEST NEWS
புடவையில் ஜிம் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்ட CWC ஸ்ருதிஹா… லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இன்றும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரபலங்கள் பலரும் உள்ளனர். நிறைய திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரீச் கொடுத்தவர்தான் நடிகை ஸ்ருதிஹா.
ஸ்ரீ, ஆல்பம் மற்றும் தித்திக்குதே போன்ற தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவர் அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது புடவையில் ஜிம் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.