LATEST NEWS
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?… அடடே இவரா?… கண்டுபுடிச்சிடீங்களா மக்களே!….

‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. 2008ல் நகுல் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. தெலுங்கு, கன்னட படங்கள் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்த முதல் படமான காதலில் விழுந்தேன் படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படமே இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இதை தொடர்ந்து அவர் நீர் பறவை, மாசிலாமணி, வம்சம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த சில்லு கருப்பட்டி மற்றும் ட்ரிப் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது.
இதைத்தொடர்ந்து இவர் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ‘லத்தி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ‘ரெஜினா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சுனேனா. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகை சுனைனாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்….