பார்வையே இப்படி காந்தம் மாதிரி இழுக்குதே.. பாவாடை தாவணியில் க்யூட்டான லுக்கில் நடிகை ஸ்வாதிஸ்டா..!! - Cinefeeds
Connect with us

CINEMA

பார்வையே இப்படி காந்தம் மாதிரி இழுக்குதே.. பாவாடை தாவணியில் க்யூட்டான லுக்கில் நடிகை ஸ்வாதிஸ்டா..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகை தான் ஸ்வாதிஸ்டா. கமலஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.

அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சூர்யாவும் ரோலக்ஸ் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த திரைப்படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்தில் நடித்ததில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவர்.

விக்ரம் திரைப்படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். இவர் குறித்து அறிந்து கொள்ள இளைஞர்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

சவரக்கத்தி திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கமலின் விக்ரம் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு சில வெப் சீரிஸ் மற்றும் ஷார்ட் பிலிம் ஆகியவற்றில் நடித்துள்ளார்.

இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது பாவாடை தாவணியில் க்யூட்டான நோக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.