கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் அசோக் செல்வன்… சொந்தங்கள் சூழ நடந்து முடிந்தது திருமணம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் அசோக் செல்வன்… சொந்தங்கள் சூழ நடந்து முடிந்தது திருமணம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் அசோக் செல்வன். இவர் நடித்த ஓ மை கடவுளே மற்றும் போர் தொழில் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வமும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

கீர்த்தி பாண்டியன் தும்பா மற்றும் அன்பிற்கினியால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பா ரஞ்சித் இயக்கத்தில் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் இவர்கள் இருவரும் நடித்துவரும் நிலையில் அப்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில் இவர்கள் திருமணம் இன்று திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள இன்டெரியில் நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Advertisement