சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் மனைவி மகாலட்சுமி உடன் ரவீந்தர் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளார். அப்போது அங்கே எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரவீந்தர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து மகாலட்சுமியின் வயிறு கொஞ்சம் பெரிதாக தெரிகிறதே என நெட்டிசன்கள் நினைத்து கர்ப்பமாக இருக்கீங்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இரண்டே மாதத்தில் கர்ப்பம் என்று அவர்கள் உறுதியாக தெரிவித்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.