விஜய் டிவி சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும்…. உறுதி செய்த முக்கிய பிரபலம்…. வைரலாகும் செய்தி….!!!! - cinefeeds
Connect with us

Uncategorized

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும்…. உறுதி செய்த முக்கிய பிரபலம்…. வைரலாகும் செய்தி….!!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை தான் ரித்திகா. இவர் விஜய் டிவியில் ராஜா ராணி மற்றும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர். இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். தற்போது இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அவர் நடித்து வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அவரின் திருமணம் குறித்து காட்சிகள் விரைவில் வர இருக்கும் நிலையில் உண்மையாகவே அவருக்கு திருமணம் நடைபெற உள்ள செய்தியை கேட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

 

அது மட்டுமல்லாமல் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி சமூக வலைத்தளத்தில் ரித்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இருந்தாலும் ரித்திகா யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement