“பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால்” தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு அதிமுக வழக்கறிஞர் நோட்டீஸ்… தமிழக அரசியலில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால்” தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு அதிமுக வழக்கறிஞர் நோட்டீஸ்… தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Published

on

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, தவெக அரசின் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு அதிமுக சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, “அதிமுகவின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்” என்றும், “அதிமுகவை அவர் ஒரு லெட்டர் பேடு கட்சியாக மாற்றி வருகிறார்” என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அமைச்சரின் இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக தலைமை, எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பியதற்காக அமைச்சர் நிர்மல் குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளது. தவறும் பட்சத்தில், அவர் மீது சட்டப்பூர்வமான அவதூறு வழக்கு மற்றும் உரிய நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிமுக தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in