VIDEOS
விஜயின் அரபிக் குத்து பாடலுக்கு காருக்குள் செம குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா லட்சுமி, ரித்திகா சிங்.. தீயாய் பரவும் வீடியோ..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
அனிருத் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதிலும் குறிப்பாக அரபிக் குத்து பாடல் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்றும் ரசிகர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடனமாடி வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது காருக்குள் அமர்ந்து பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ரித்திகா சிங் ஆகிய இருவரும் விஜயின் அரபிக் குத்து பாடலுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Actress Aishwarya Lakshmi & Rithika Singh Vibing for Arabic Kuthu#Leo @anirudhofficial @actorvijaypic.twitter.com/qgcvvOcTeJ
— Mᴜʜɪʟツ (@MuhilThalaiva) August 24, 2023