VIDEOS
இரவின் நிழல் படத்திற்கு தேசிய விருது பெற்ற ஸ்ரேயா கோஷல்.. கால் பண்ணி வாழ்த்து கூறிய பவி டீச்சர்.. வைரலாகும் வீடியோ..!!

69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் கடைசி விவசாயி என்ற திரைப்படம் சிறந்த பிராந்திய மொழி பிரிவில் விருது பெற்றது. அதனைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் மாயவா தூதுவா என்ற பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
இரவில் நிழல் படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது முழு முதல் காரணமான விஞ்ஞானியான ஏ ஆர் ரகுமானுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி என்று பார்த்திபன் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இரவின் நிழல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியவர் தான் பிரகிடா என்ற பவி டீச்சர். இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பாராட்டப்பட்ட நிலையில் தற்போது இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில் இரவின் நிழல் திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி பாடகி விருது பெற்ற ஸ்ரேயா கோஷலுக்கு பிரகிடா நேற்று போன் செய்து பேசி உள்ளார். அந்த நெகிழ்ச்சியான வீடியோவை அவர் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வர ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க