LATEST NEWS
தங்க நிற உடையில்….. தங்கம் போல் ஜொலித்த ஐஸ்வர்யா ராஜேஷ்….. செம வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தொகுப்பாளியாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பிறகு மாநாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றார். 2010 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவருக்கு காக்கா முட்டை திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு வடசென்னை படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், மோகன் தாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் இவர் பிஸியாக நடித்து வருகிறார். பிஸியாக இருந்தாலும் மற்ற நடிகைகளை போல இவரும் விதவிதமான ஆடைகளை அணிந்து போட்டோ சூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது வழவழப்பான தங்க நிற உடையில் இவர் போட்டோ சூட் எடுத்து அதனை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷய் வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.