LATEST NEWS
தனுஷை பிரிந்த பிறகு தனியாக பொங்கலுக்கு தயாரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. புடவையில் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வாதி மற்றும் கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இருந்தாலும் தங்களின் இரண்டு பிள்ளைகளுக்காக விவாகரத்து செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கத்திலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஜிம் ஒர்க் அவுட் வீடியோ புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
தற்போது ஐஸ்வர்யா தனுசை பிரிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடையும் நிலையில் 18 வருடங்களுக்குப் பிறகு இருவரும் தனியாக பொங்கல் கொண்டாட உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பொங்கலுக்கு தயாராகி இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ள நிலையில் அதற்கு ரசிகர்கள் தனுசு உடன் சேர்ந்து எப்போது புகைப்படம் போடப் போறீங்க என கேள்வி கேட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க