LATEST NEWS
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற முதல் தென்னிந்திய நடிகர்… அல்லு அர்ஜுன் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர்.. வைரல் புகைப்படங்கள்..!!

இந்திய திரையுலகினரை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று மாலை 69ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மிகவும் எதிர்பார்த்த படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இருந்தாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகை சேர்ந்தவர்கள் அதிக அளவில் விருதுகளை பெற்றுள்ளனர்.
அதன்படி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா தி ரைஸ் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முதல்முறையாக தெலுங்கில் தேசிய விருதை பெற்ற முதல் நடிகர் என்ற சாதனையை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த கொண்டாடி வருகிறார்கள்.
அதே சமயம் தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமாரை கட்டி தழுவி கண்ணீர் சிந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணத்தில் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தெலுங்கு திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அல்லு அர்ஜுனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி புஷ்பா தி ரைஸ் திரைப்படம் வெளியான நிலையில் இந்த படத்தில் புஷ்பராஜ் வேடத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார்.
செம்மர கடத்தல் பின்னணியில் ஆக்சன் என்டர்டைன்மென்ட் திரைப்படமாக உருவாகிய இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்ததை கேக் வெட்டி தெலுங்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் கொண்டாடியுள்ளனர்.
அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வர பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.