LATEST NEWS
திருமாவோடு மோதலா..? தனி கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷா நவாஸ்..? அவரே உடைத்த அரசியல் உண்மை..!!
கடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிட்டிங் எம்.எல்.ஏ-க்களான ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு மற்றும் எஸ்.எஸ். பாலாஜி ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்தது. புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவே இந்த முடிவு என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கமளித்தாலும், இவர்கள் திமுகவுடன் நெருக்கம் காட்டியதே இதற்குக் காரணம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த பனையூர் பாபு தேர்தலுக்குப் பின் திமுகவில் இணைந்தார்.
இந்தச் சூழலில், விசிக மாநில முதன்மை செயலாளரான ஆளூர் ஷா நவாஸும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் திருமாவளவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனிக்கட்சி தொடங்கி திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் பரவின. மேலும், விசிக தற்போது தவெக கட்சியுடன் கூட்டணியில் இணையவிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் வதந்திகள் பரவி தமிழக அரசியலில் புயலைக் கிளப்பின.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆளூர் ஷா நவாஸ் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், விசிக தலைவர் திருமாவளவனுடன் தனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்றும், கடந்த ஒரு மாதமாகத் தமிழ்நாட்டில் இல்லாததால் நீங்களாகவே ஒரு கற்பிதத்தை உருவாக்கியுள்ளீர்கள் என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தான் திருச்சி கிழக்கில் போட்டியிடுவதாக வெளியான தகவல்கள் வெறும் ஊகம் மட்டுமே என்றும், தவெகவிற்கு ஆதரவளிப்பது என்பது கட்சி ஒன்றாகக் கூடி எடுத்த ஒருமித்த முடிவு என்றும் கூறி தனிக்கட்சி வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
