LATEST NEWS
“வாழ்க்கையில இது மட்டும் இருந்தா போதும்”… இணையத்தில் வைரலாகும் நடிகர் கவுண்டமணியின் பழைய வீடியோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் கவுண்டமணி. இவரின் காமெடிக்கு இன்றும் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் ஆரம்பித்த இவரின் காமெடி மாரத்தானில் “சின்ன வாத்தியார்” திரைப்படம் கவுண்டமணியை காமெடியில் பெரிய வாத்தியார் என நிரூபித்தது. அடுத்ததாக கவுண்டமணியின் கவுண்டர் ஸ்பெஷல் நிறைந்த திரைப்படமாக நாட்டாமை திரைப்படம் அமைந்தது.
கவுண்டமணி செந்தில் உடன் நடித்த அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரின் காமெடியை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அதிலும் குறிப்பாக கவுண்டமணியின் சில திரைப்பட காமெடிகள் மற்றும் டயலாக் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
இவர் மீண்டும் எப்போது திரைக்கு வருவார் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நடிகர் கவுண்டமணி சத்யராஜ் உடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது வாழ்க்கை தத்துவம் குறித்த ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க