LATEST NEWS
“எனக்கு துணை முதல்வர் பதவி வேணும்” கண்டிஷன் போட்ட அன்புமணி… என்னடா இது..? பற்றி எரியும் தவெக வட்டாரம்..!!
தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில், முதல்வர் விஜய் குறித்த முக்கிய அரசியல் தகவல்களை ஒரு பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ளது. தனக்கு மிகவும் நெருக்கமானவர்களுடன் அவர் நடத்திய ஆலோசனையின் போது, தற்போதைய அரசியல் சூழலில் வைகோ மட்டுமே தமக்காக ஆதரவாகக் குரல் கொடுத்து வருவதாகவும், மற்ற கட்சிகள் மற்றும் தலைவர்கள் அந்த அளவுக்கு தமக்கு ஆதரவாக இல்லை என்றும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டதாக அச்செய்தித் தெரிவிக்கிறது.
மேலும், கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து பேசியபோது, பாமகவின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் முதல்வர் விஜய் விசாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலளித்த அவரது நெருங்கிய வட்டாரத்தினர், தவெக அமைச்சரவையில் பாமக இணைய வேண்டுமென்றால், தங்களுக்குத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிபந்தனை விதிப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை முதல்வர் விஜய் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்த அரசியல் கணக்கீடுகள் மற்றும் கூட்டணி வியூகங்கள் சூடுபிடித்து வரும் நிலையில், தவெக தரப்பில் உலா வரும் இந்தத் தகவல்கள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பாமகவின் இந்தக் கடுமையான நிபந்தனை மற்றும் வைகோவின் ஆதரவு குறித்த விஜய்யின் எண்ண ஓட்டம் ஆகியவை வரும் காலத்துத் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
