LATEST NEWS
அங்காடித்தெரு பட நடிகை சிந்து திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்… ரசிகர்கள் இரங்கல்..!!

தமிழில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் அங்காடி தெரு. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சிந்து. அதன் பிறகு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்த இவர் கொரோனா காலகட்டத்தில் உணவு இல்லாமல் தவித்தவர்களுக்கு உதவி செய்தார்.
இப்படி சேவை மனம் கொண்ட இவர் சமீபத்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட மிகவும் அவதிப்பட்டு வந்தார். திடீரென மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த இவர் கண்ணீர் மல்க பல வீடியோக்களையும் வெளியிட்டார். இவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கீழ்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
42 வயதாகும் நடிகை சிந்துவின் மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.