CINEMA
ஆகஸ்ட்-9 முதல்…. மீண்டும் ஓடிடி தளத்தில் வருகிறாள் “அன்னபூரணி”….!!
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75 ஆவது திரைப்படம் அன்னபூரணி. கடந்த 2023 ஆம் வருடம் இந்த படம் வெளியானது . இந்த படத்தில் ஜெய், சத்யராஜ் ஆகியோரோடு நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தில் நயன்தாரா ஒரு சமையல்காரர் ஆக விரும்புவார். ஆனால் அவருடைய கனவை நிறைவேற்றம் முயற்சிக்கும் பொழுது பட பல தடைகளை எதிர்கொள்வார் . இதுதான் இந்த படத்தின் கதை.
இந்நிலையில் ‘அன்னபூரணி’ திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் ஆக. 9ஆம் தேதி முதல் ‘சிம்ப்ளி சவுத்’ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த 2023 டிசம்பரில் வெளியான இந்த படத்தில், ராமர் அசைவம் சாப்பிட்டதாக வசனம் இடம்பெற்றதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் இது இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது தளத்தில் இருந்து படத்தை நீக்கியது குறிப்பிடத்தக்கது.