CINEMA
இட்லி கடையில் நான் இல்லை…. எக்ஸ் பக்கத்தில் பதிவு போட்ட நடிகர் அசோக் செல்வன்…!!
ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி, நடிக்கும் திரைப்படம் ‘இட்லி கடை’. இந்த படத்தில் அசோக் செல்வன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தான் நடிக்கவில்லை என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில், “எனக்கும் தனுஷ் சார் மிகவும் பிடிக்கும்.
அவருடைய மிகப் பெரிய ரசிகன் நான். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப் படுகிறேன். ஆனால் இப்பொழுது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் இட்லி கடை படத்தில் நடிக்கவில்லை என பதிவிட்டுள்ளார்.