CINEMA
“படு கவர்ச்சி காட்டும் கீர்த்தி” அவங்க புருஷனே சும்மா இருக்காரு…. மத்தவங்களுக்கு என்ன…? விளாசிய பிரபலம்…!!!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆன நடிகர் அருண்பாண்டியன் சிதம்பர ரகசியம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஊமை விழிகள், இணைந்த கைகள் உட்பட பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பல படங்களையும் தயாரித்து வருகிறார். அருண்பாண்டியனுக்கு கவிதா பாண்டியன், கிரானா பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய மூன்று மகள்கள். ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில் கீர்த்தி பாண்டியனுக்கு சமீபத்தில் அசோக் செல்வனோடு திருமணம் நடைபெற்றது.
கீர்த்தி பாண்டியன் தும்பா படத்திற்கு பிறகு அன்பிற்கினியால் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் ப்ளூ ஸ்டார் திரைப்படம் அவருடைய நடிப்பில் வெளியானது. இந்த படத்தில் அசோக் செல்வனோடு இவர் நடித்திருந்த நிலையில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் தற்போது கீர்த்தி பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இதனை சிலர் கடுமையாக விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள பத்திரிக்கையாளர் சுபைர், ஒரு காலத்தில் மார்க்கெட் இல்லாவிட்டால் நடிகைகள் தங்களுடைய கிளாமரான புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு கொடுப்பார்கள். ஆனால் இப்பொழுது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ப்ரமோஷன் செய்து கொள்கிறார்கள். அப்படித்தான் கீர்த்தி பாண்டியனும். இந்த விவகாரத்தில் அவருடைய கணவர் அசோக் செல்வனே சும்மா இருக்கிறார் மற்றவர்கள் ஏன் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
