VIDEOS
முடியை வெட்டி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய பாரதி கண்ணம்மா ஃபரீனா… வைரலாகும் வீடியோ..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஃபரினா ஆசாத். இந்த சீரியலில் வில்லத்தனமான ரோலாக இருந்தாலும் இந்த கேரக்டர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கர்ப்பமானதால் அவர் சிறைக்குச் செல்வது போல கதை மாற்றப்பட்டு பிறகு குழந்தை பிறந்தது மீண்டும் அதே சீரியலில் நடிக்க தொடங்கினார்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. அந்த புகைப்படங்களை இவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது பாரதி கண்ணம்மா இரண்டாவது சீசனிலும் இவர் வில்லியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது தனது முடியை பாதியாக கட் செய்து புதிய லுக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகிய வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க