VIDEOS
“இரண்டு மனைவி வச்சுக்கிட்டா இந்த நிலைமைதான்”… நடுரோட்டில் குப்பை அள்ளும் பாக்கியலட்சுமி கோபி… அவரே வெளியிட்ட வீடியோ..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தினம் தோறும் புது விதமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சீரியலின் கதாநாயகன் ஆன கோபி தனது குடும்பத்தை விட்டுவிட்டு ராதிகா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் பாக்யா தன்னந்தனியாக நின்று குடும்பத்தை கவனித்து வருகிறார்.
தற்போது இனியாவை கல்லூரியில் சேர்க்கும் காட்சியுடன் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதீஷ் ஒரு வீடியோவை தற்போது பகிர்ந்து உள்ளார். அதாவது அந்த வீடியோவில் நடுரோட்டில் குப்பையை பெருக்கி கூட்டுவது போல சதீஷ் காணப்படுகிறார்.
அது தொடர்பான பதிவில், என்ன பாக்கறீங்க ஆபீஸ் எல்லாம் திவால் ஆயிடுச்சு என்றும் இப்போ என்னோட நிலைமை இதுதான், ஒன்னு வச்சிக்கிட்டு சந்தோசமா வாழுங்க ரெண்டு வச்சுகிட்டா இதுதான் நிலைமை எனக்கூறி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க