LATEST NEWS
பாரதி கண்ணம்மா சீரியல் நாயகி போட்ட பதிவு…. அதிர்ந்து போன ரசிகர்கள்…. அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா….????

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இன்னும் முடிவுக்கு வராததால் இந்த வாரம் பல அதிரடியான உண்மைகளுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் திரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை பார்த்து வருகிறார்கள்.
குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்களும் தெரியவந்துள்ள நிலையில் சீரியல் எப்போது முடிவடையும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் சீரியலில் லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் தனது குழந்தைகள் தான் என பாரதி தெரிந்து கொண்ட நிலையில் போலீசார் வெண்பாவை கைது செய்ய மறுப்பக்கம் பாரதி கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சுகிறார்.
இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கண்ணம்மா தனது இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு ஊரை விட்டு சென்று விட்டார். அவரைத் தேடி பாரதி சென்றுள்ளார். இதனால் சீரியல் இத்துடன் நிறைவு பெறும் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தொடரின் நாயகி வினுஷா coming soon என்று எழுதி பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும் பாரதி கண்ணம்மா சீசன் 2 விரைவில் தொடங்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.