சொந்த ஊரிலேயே கமுக்கமாக ஜிபி முத்து பார்த்த வேலை… இப்படி ஒரு பிளான் இருக்கா?.. வீடியோ பார்த்து வாழ்த்தும் ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

VIDEOS

சொந்த ஊரிலேயே கமுக்கமாக ஜிபி முத்து பார்த்த வேலை… இப்படி ஒரு பிளான் இருக்கா?.. வீடியோ பார்த்து வாழ்த்தும் ரசிகர்கள்..!!

Published

on

டிக் டாக் மூலம் பிரபலமடைந்து இன்று மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரபலங்களில் ஒருவர்தான் ஜி பி முத்து. தூத்துக்குடி மாவட்டம் அருகே உடன்குடி அருகே வெங்கடாசலப்புரத்தை சேர்ந்த இவர் காமெடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். டிக் டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயல்களில் வீடியோ பகிர்ந்து வந்தார்.

இப்படி வீடியோக்களை மட்டும் வெளியிட்டு வந்த இவருக்கு பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சன்னி லியோன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் அஜித் நடிப்பில் வெளியான முடிவு திரைப்படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் இவர் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் ஜிபி முத்து சமீபத்தில் சொந்தமாக புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அவரின் ஊரில் சொந்தமாக நிலம் வாங்கியுள்ளார். 40 சென்ட் நிலம் வாங்கி இருக்கும் நிலையில் அதில் இருக்கும் கருவேல மரங்களை வெட்டிவிட்டு அந்த இடத்தில் தோட்டம் அமைக்கப் போவதாக ஜிபி முத்து கூறி ஒரு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in