CINEMA
“JR34” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்… யார் தெரியுமா…??

நடிகர் ஜெயம் ரவி தனது சகோதரனின் இயக்கத்தில், தந்தை தயாரிப்பில் வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், எங்கேயும் காதல், தனி ஒருவர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி அருள் மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
கடைசியாக பிரதர் படத்தில் நடித்துள்ளார். ந் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவியின் 34 ஆவது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.