திக் திக் திக்..! ஒரே நாளில் 4 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… அலறிய பயணிகள்… அடுத்தடுத்து நடந்த அவசர தரையிறக்கம்.. ஐரோப்பாவில் உச்சக்கட்ட பதற்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திக் திக் திக்..! ஒரே நாளில் 4 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… அலறிய பயணிகள்… அடுத்தடுத்து நடந்த அவசர தரையிறக்கம்.. ஐரோப்பாவில் உச்சக்கட்ட பதற்றம்..!!

Published

on

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பறந்த நான்கு பயணிகள் விமானங்கள் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்களுக்கு உள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லண்டன், மான்செஸ்டர், கோபன்ஹேகன் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட இந்த விமானங்களுக்கு பறக்கும் போதே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவை சம்பந்தப்பட்ட நாடுகளின் விமான நிலையங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து 181 பயணிகளுடன் போலந்து தலைநகர் வார்சா நோக்கிச் சென்ற விமானத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அது திட்டமிடப்பட்ட வழிமாற்றப்பட்டு வார்சா-மாட்லின் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதேபோல் கோபன்ஹேகனில் இருந்து வார்சா சென்ற மற்றொரு விமானமும் மிரட்டலுக்குள்ளாகி பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டின் முர்சியா நோக்கிப் பயணித்த ரயான் எயர் விமானத்தில் 121 பேர் பயணம் செய்த நிலையில், அங்கேயும் பாதுகாப்பு நெறிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் பல்கேரியாவின் சோபியா விமான நிலையத்திலும் இஸ்ரேலில் இருந்து வந்த விமானம் ஒன்று மின்னஞ்சல் மூலமான வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

Advertisement

இந்த தொடர் சம்பவங்களுக்கு முந்தைய நாள் லண்டன் லூட்டனில் இருந்து சோபியா சென்ற விஸ் எயர் விமானத்திற்கு இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, ஹங்கேரிய போர் விமானங்கள் மூலம் பாதுகாப்பாக வழிநடத்தப்பட்டு தரையிறக்கப்பட்ட சோகம் நிகழ்ந்திருந்தது. தொடர்ச்சியாக நிகழும் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஐரோப்பிய நாடுகளின்  வான்வெளிப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையினரிடையே பெரும் சவாலையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட விமானங்களில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனைகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை  என்றாலும், இந்த மிரட்டல்களுக்கு பின்னால் உள்ள மர்ம நபர்களைக் கண்டறியப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in