LATEST NEWS
தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி..! டியூஷனுக்கு சென்ற சிறுவன் திடீர் மாயம்… பெரும் பரபரப்பு..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டியூஷனுக்குச் சென்ற சஞ்சய் (12) என்ற சிறுவன் மாயம் ஆகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் பைக்கில் லிப்ட் கேட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், அவனது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சிறுவனை யாரேனும் கடத்தினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
