மரண தண்டனை மீண்டும் அமல்… அறிவியல் போட்டிக்கு ஊக்குவிப்பு… அழகி போட்டிக்கு தடை..! புர்கினா பாசோ அதிபரின் அதிரடி நடவடிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மரண தண்டனை மீண்டும் அமல்… அறிவியல் போட்டிக்கு ஊக்குவிப்பு… அழகி போட்டிக்கு தடை..! புர்கினா பாசோ அதிபரின் அதிரடி நடவடிக்கை..!!

Published

on

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாசோவில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், மரண தண்டனையை நிறைவேற்றும் சட்டத்தை மீண்டும் கொண்டுவந்து அதிபர் இப்ராஹிம் டிராவோரே சட்டம் இயற்றியுள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாசோ நாட்டை கடந்த 2022-ஆம் ஆண்டு கைப்பற்றி ராணுவ ஆட்சியை அதிபர் இப்ராஹிம் டிராவோரே நடத்தி வருகிறார். இவரது ஆட்சியின் கீழ் செயல்பட்டு வரும் அரசாங்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இளம் பெண்களின் கல்விக்காக கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளில் அறிவியல் போட்டியை அறிமுகம் செய்தது. இதையடுத்து வெற்றிபெற்ற மாணவிகளை சந்தித்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் தங்களது வாழ்க்கையை தொடருமாறு அதிபர் இப்ராஹிம் ஊக்குவித்தார். மேற்கு ஆப்பிரிக்காவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றுதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அந்த நாட்டில் கடைசியாக 1988 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், மரண தண்டனையை நிறைவேற்றும் சட்டத்தை மீண்டும் இயற்றி அதிபர் இப்ராஹிம் ட்ராவோரே உத்தரவிட்டுள்ளார். மேலும் மேற்கு ஆப்பிரிக்காவில், அழகி போட்டி நடத்தவும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் அதிபர் இப்ராஹிம் கொண்டு வந்த சட்டத்திற்கு, 71 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in