BREAKING: அதிமுகவின் தோல்வி.. EPS-க்கு CV சண்முகம் கொடுத்த அலர்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: அதிமுகவின் தோல்வி.. EPS-க்கு CV சண்முகம் கொடுத்த அலர்ட்..!!

Published

on

அதிமுக சந்தித்த இடைத்தேர்தல் தோல்விகள் குறித்து விவாதிக்கவும், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவும் உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சி.வி. சண்முகம் அறிவுறுத்தியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த சி.வி. சண்முகம், தற்போதைய தோல்விகளால் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் போக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள இந்த இக்கட்டான சூழலில், தொண்டர்களுக்குப் புதிய நம்பிக்கையை ஊட்ட வேண்டிய கடமை தலைமைக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரிந்து கிடக்கும் அனைவரையும் அரவணைத்துச் சென்று, அந்த நம்பிக்கையைத் தலைமை வழங்கிவிட்டால், தொண்டர்கள் உற்சாகமடைவார்கள் என்றும், அதன் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான அதிமுக மீண்டும் மாபெரும் சக்தியாக மீண்டெழும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in