CINEMA
பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘சந்திரமுகி 2’ இசைவெளியீட்டு விழா… முதன்முறையாக இணையத்தில் வெளியான புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் பி. வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படத்தை தற்போது பி வாசு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அதனைப் போலவே சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகையான கங்கணா ரனாவத் நடித்துள்ள நிலையில் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன் மற்றும் சிருஸ்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
அதில் வேட்டையின் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் மிரட்டியுள்ளார். இந்த போஸ்டருடன் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
எனவே அதற்காக சந்திரமுகி 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள JEPPIAAR Engineering College -ல் நடைபெற்றது. தற்பொழுது நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.