LATEST NEWS
ஹே சந்திரயான் “நிலவில் நீ மடியேறு நாளை நாங்கள் குடியேற”… கவிஞர் வைரமுத்து X பதிவு..!!
நிலவுக்குச் செல்லும் சந்திராயன் 3 என்ற விண்கலத்தை சுமந்தபடி கடந்த ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு lvm3 எம் 4 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவி சுற்றுவட்ட பாதையில் நிலநடுக்கப்பட்டது. பூமியை சுற்றி வந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி புவியீர்ப்பு விசையிலிருந்து சந்திராயன் 3 விண்கலம் விளக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணம் பாதை மாற்றம் செய்யப்பட்டது.
நிலவிற்கு மிக நெருக்கமாக அதாவது இறுதி கட்ட சுற்றுப்பாதையில் வலம் வந்து கொண்டிருக்கும் சந்திராயன் 3 விண்கலத்தில் இருந்து லேண்டெர் கலன் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வெண்கலம் இன்று மாலை 6.4 மணிக்கு நிலவில் இறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் நேரலை காட்சிகளை பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் காண்பதற்கான லிங்க்குகள் இஸ்ரோவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திராயன் 3 விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து எக்ஸ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
