Uncategorized
சென்னையில் “கல்லூரி மாணவியை பாலியல்” வன்கொடுமை செய்து ‘வீடியோ எடுத்து மிரட்டி வந்த’… ‘பிரபல நடிகரின் மகன் அதிரடி கைது’!

பிரபல குணசித்திர நடிகரின் மகன் கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு குளிர் பணத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.
தமிழ் சினிமாவில் ‘கிழக்கு சீமையிலே படத்தில்’ வில்லன் ரோலில் நடித்து புகழ் பெற்ற நடிகர் சூர்யபிரகாஷ் இவர் சுமார் 50ம் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் தூறல் நின்னு போச்சு, வசந்த காலம் விக்ரமின் அருள் படம் போன்றவையாகும். வில்லன் மற்றும் குணசித்திர கேரட்டரில் நடித்து வருகிறார்.
இவரது மகன் விஜய் ஹரீஸ் (25), இவர் தற்போது ‘நாங்களும் நல்லவங்கதான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தேனாம்பேட்டையை சேர்ந்த குறிப்பிட்ட கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், நடிகர் சூர்யபிரகாஷின் மகன் விஜய் ஹரீஸ் என்னை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார் என்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து விசாரணை செய்த போலீசார் நடிகரின் மகன் மற்றும் அந்த மாணவி இருவரும் ஒன்றாக பழகி வந்தனர். இதனிடையில் கடந்த மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மாணவியை தனது வீட்டிற்க்கு வரவழைத்து குளிர் பணத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் அதனை தனது செல் போனில் வீடியோ எடுத்து அப்பெண்ணை மிரட்டி அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். அதனை பொறுத்து கொள்ளாமல் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகரின் மகன் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படியில் கற்பழிப்பு , மிரட்டல் என பல பிரிவுகளில் வழக்கு பந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.