LATEST NEWS
டைட்டான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த குக் வித் கோமாளி தர்ஷா குப்தா…. வைரலாகும் ஹாட், க்யூட் கிளிக்ஸ்….!!!

சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா.கோவையை சேர்ந்த மாடல் அழகியான இவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். அவ்வகையில் அவளும் நானும், செந்தூரப்பூவே மற்றும் முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.
அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனால் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இவர் ஹீரோயினியாக அறிமுகமான திரைப்படம் தான் ருத்ர தாண்டவம்.
அதனைத் தொடர்ந்து தற்போது ஓ மை கோஸ்ட் என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா தற்போது டைட்டான வெள்ளை நிற உடைகள் ரசிகர்களை மயக்கும் படியான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க