தமிழ் திரைப்பட நடிகரான கூல் சுரேஷ் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை முதல் நாளே பார்த்து படம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதனாலயே இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
அது மட்டுமல்லாமல் இவர் ஒரு தீவிர சிம்பு ரசிகரும் கூட. வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு என்ற வசனம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது ஒவ்வொரு படத்தின் முதல் காட்சிக்கு பின்பும் விமர்சனம் கூறுவதை செய்து வருகின்றார்.
இவரின் விமர்சனத்தை பார்ப்பதற்கே ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பத்து தலதிரைப்படத்திற்காக கூட ஹெலிகாப்டரில் வந்து இறங்கி விமர்சனம் கூறப்போவதாக திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் கூல் சுரேஷ் பிரபல தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சிம்புவை வைத்து தன்னுடைய விளம்பரத்திற்காக கூல் சுரேஷ் இப்படி செய்து வருகிறார் என ரசிகர்கள் பேசுகிறார்கள் என்று தொகுப்பாளர் கேள்வி கேட்க,முதலில் பொறுமையாக பேசிக் கொண்டிருந்த கூல் சுரேஷ் ஒரு கட்டத்தில் தொகுப்பாளருடன் சண்டை போட்டு கோபமடைந்து படகிலிருந்து கடலில் குதித்தார். அதனால் அங்கிருந்து அனைவரும் பதற்றம் அடைந்தனர். அதன் பிறகு அங்கிருந்த நபர்களின் உதவியுடன் அவரை மீண்டும் படகிற்கு கொண்டு வந்தனர். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.