LATEST NEWS
“என் தங்கச்சியோட பாவாடை கிழிஞ்சிருக்கு”… பாவாடையுடன் தியேட்டருக்கு வந்த Cool சுரேஷ்… வைரலாகும் வீடியோ….

சமூக வலைத்தளங்களின் மூலம் மிகப் பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் நடித்த திரைப்படங்களை விட இணையத்தின் மூலம் தான் இவர் மிகப் பிரபலமாக உள்ளார் என்றே கூறலாம். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் என்பதும் நாம் அனைவரும் அறிந்து ஒன்றே. இவரை வெள்ளிக்கிழமை நாயகன், youtube சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர்.
தனது திரைப்படத்தின் ரிலீஸ் அன்று தியேட்டர் வாசலுக்கு வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து விளம்பரம் செய்வார் கூல் சுரேஷ். இவர் சமீபத்தில் சென்னையில் பிவிஆர் சினிமா நிறுவனத்தின் புதிய திரையரங்கு திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ‘பகாசுரன் திரைப்படம் மட்டும் கொடுக்கவில்லை என்றால் தியேட்டர் வாசலில் பிச்சை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளேன்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து தற்பொழுது நேற்று ரிலீசான ஜெயிலர் திரைப்படம் பார்க்க தியேட்டருக்கு வந்த அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் ‘என்னோட தங்கச்சி தமன்னாவின் பாவாடை கிழிஞ்சிருக்கு எனக்கூறி பாவாடையை காட்டி பேட்டியளித்துள்ளார். தற்பொழுது இந்த விடியோவானது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…