LATEST NEWS
மாநகராட்சி அலுவலகத்தில் அதிர்ச்சி… பணியில் இருந்தபோதே மயங்கி விழுந்து உதவி ஆணையாளர் உயிரிழப்பு… பெரும் சோகம்..!!
திருநெல்வேலி மாநகராட்சியில் கணக்குப் பிரிவின் உதவி ஆணையாளராகப் பணியாற்றி வந்தவர் எஸ்.பாலசுந்தரம் (வயது 52). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவடி மாநகராட்சியிலிருந்து இடமாறுதலாகி திருநெல்வேலி மாநகராட்சியில் பொறுப்பேற்றுப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், வழக்கம் போல் மாநகராட்சி அலுவலகத்தில் தனது பணிகளைக் கவனித்து வந்த அவர், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, எதிர்பாராதவிதமாக அலுவலகத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்ற நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அலுவலகப் பணியில் இருந்தபோதே அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த இச்சம்பவம் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
