“நான் எங்கும் ஓடிப் போகவில்லை, அது கொலை அல்ல..!” தொழிலதிபர் மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பம்.. தலைமறைவு காதலி வெளியிட்ட பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் எங்கும் ஓடிப் போகவில்லை, அது கொலை அல்ல..!” தொழிலதிபர் மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பம்.. தலைமறைவு காதலி வெளியிட்ட பகீர் வீடியோ..!!

Published

on

லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உணவக அதிபர் ஷிவா சர்மா மரண வழக்கில், முக்கிய குற்றவாளியாகச் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் சமூக வலைதள பிரபலம் மற்றும் மாடலான ஸ்ரத்தா துபே, தான் நிரபராதி என்று வாதிடும் வகையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வழக்கில் ஸ்ரத்தா துபே, அவரது சகோதரி ரஷ்மி உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு உத்திரப் பிரதேச காவல்துறை 25,000 ரூபாய் சன்மானம் அறிவித்த சில மணி நேரங்களில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. தான் எங்கும் ஓடிப் போகவில்லை என்றும், காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

அக்டோபர் 9 அன்று லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து விழுந்து ஷிவா சர்மா மரணமடைந்த சம்பவத்திற்கும், தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று ஸ்ரத்தா துபே அந்த வீடியோவில் மறுத்துள்ளார். இது கொலை அல்ல, தற்கொலை என்று அவர் கூறியுள்ள நிலையில், ஷிவாவின் குடும்பத்தினரோ ஸ்ரத்தா துபே தங்களை மிரட்டி, பணம் பறித்து, அடித்துக் கொலை செய்ததாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதற்கிடையில், ஸ்ரத்தாவின் எஸ்.யூ.வி கார் இந்திய-நேபாள எல்லையான பஹ்ரைச் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அவர் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in