பரபரப்பு..! “ஒவ்வொரு ராமனும் கொல்லப்படும் வரை…” மேடையில் உளறிக்கொட்டிய ரேகா குப்தா – வீடியோவைப் பகிர்ந்து போட்டுத்தாக்கும் ஆம் ஆத்மி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பரபரப்பு..! “ஒவ்வொரு ராமனும் கொல்லப்படும் வரை…” மேடையில் உளறிக்கொட்டிய ரேகா குப்தா – வீடியோவைப் பகிர்ந்து போட்டுத்தாக்கும் ஆம் ஆத்மி..!!

Published

on

டெல்லி ஆசாத்பூரில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, “ஒவ்வொரு ராமனும் கொல்லப்படும் வரை, சமூகம் தூய்மையாகவும் ஒழுங்காகவும் இருக்காது” என்று ரேகா குப்தா தவறுதலாகக் குறிப்பிட்டார். ராவணன் என்பதற்குப் பதிலாக அவர் ‘ராமன்’ என்று வாய் தவறிப் பேசிய இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சர்ச்சைக் காணொளியைச் சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சௌரப் பரத்வாஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு ராமரின் மீதும் சனாதனத்தின் மீதும் உண்மையான பற்று இல்லை என்பதை இது காட்டுவதாகவும், முதலமைச்சரின் இத்தகையப் பேச்சு வெட்கக்கேட்டின் உச்சம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

இதேபோல் காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரத்தில் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதனிடையே, ரேகா குப்தா பொதுமேடைகளில் இதுபோன்று வார்த்தைகள் தவறிப் பேசுவது இது முதல் முறையல்ல என்பதும், கடந்த காலங்களிலும் அவர் இதுபோன்று பேசிய சர்ச்சைக் கருத்துகள் பேசுபொருளாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in