CRIME
“தேர்தலில் நிக்காதீங்கப்பா…” மகன் சொன்ன ஒரே வார்த்தை… நள்ளிரவில் தந்தை எடுத்த கொடூர முடிவு.. கிராமத்தை உலுக்கிய இரட்டைக்கொலை.. பரபரப்பு பின்னணி..!!
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சங்கோய் கிராமத்தில், பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிடிவாதத்தால் தந்தை ஒருவரே தனது ஒரே மகனையும் மருமகளையும் பொலிரோ காரால் மோதிக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதான ராமச்சந்தர் ஜாட் என்ற முதியவர் வரவிருக்கும் சர்பஞ்ச் தேர்தலில் போட்டியிட விரும்பியுள்ளார். ஆனால், அவரது 40 வயது மகன் ரவீந்திரா மற்றும் 35 வயது மருமகள் மகிந்த்ரா ஆகியோர் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் குடும்பத்தில் கடந்த சில நாட்களாகத் தகராறு நீடித்து வந்த நிலையில், சம்பவத்தன்று இரவு ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, தம்பதியினர் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ராமச்சந்தர் தனது பொலிரோ காரால் அவர்கள் மீது பின்னால் இருந்து மோதி ஏற்றியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் கொடூர இரட்டைக் கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, குற்றம் சாட்டப்பட்ட தந்தை ராமச்சந்தர் ஜாட்டை உடனடியாகக் கைது செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த அரசியல் வெறி மற்றும் அதிகார மோகத்தால் அரங்கேறிய விபரீதத்தின் விளைவாக, அந்த தம்பதியரின் 11 வயது நிரம்பிய அனிதா என்ற சிறுமி, தனது பெற்றோர் இருவரையும் ஒரே நாளில் இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பதவியை அடையப் பெற்ற மகனையும் மருமகளையும் கொன்ற தந்தையின் இந்த கொடூரச் செயல் அந்த கிராமம் முழுவதும் பெரும் சோகத்தையும், சமூக வலைதளங்களில் பலத்த கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
