LATEST NEWS
அட இவரும் நம்ம ரஜினி ரசிகர் தானா?.. குடும்பத்துடன் ஜெயிலர் படம் பார்க்கச் சென்ற புகைப்படத்தை வெளியிட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் திரையரங்கிற்கு நேரில் சென்று படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள்.
ரஜினிக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரஜினியின் ரசிகர் என தெரியவந்துள்ளது. அதாவது துபாயில் இருக்கும் ரொனால்டோ ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளார்.
அது தொடர்பான ஒரு புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ரொனால்டோவும் நம்ப தலைவர் ரசிகர் தானா என்று ரசிகர்கள் அனைவரும் குதுக்களத்துடன் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க