VIDEOS
மூன்றே மாதத்தில் 12 கிலோ எடை குறைத்த CWC கனியின் கணவர் திரு… இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?… அவரே பகிர்ந்த புகைப்படம்..!!
விஜய் டிவியில் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கனி. அந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான். இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள், இயக்குனர் திருவின் மனைவி. இதனைத் தவிர தனக்கென பல அடையாளத்தையும் சொந்தமாக கொண்டவர் தான் கனி.
முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த இவர் தற்போது தனது youtube சேனலில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.இவர் இயக்குனர் திருவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தீராத விளையாட்டுப் பிள்ளை, நான் சிவப்பு மனிதன் மற்றும் மிஸ்டர் சந்திர மௌலி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் திரு மூன்று மாதத்தில் 12 கிலோ வரை கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சி மூலமாக உடல் எடையை குறைத்ததாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தனது இந்த மாற்றத்தில் துணையாக இருந்தது தனது மனைவி எனவும் அவர் பெருமையாக பேசி உள்ள நிலையில் அவர் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
