தல தோனி ஸ்டைலில் டி-ஷர்ட்டில் ஆட்டோகிராப் போட்ட சிவகார்த்திகேயன்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

தல தோனி ஸ்டைலில் டி-ஷர்ட்டில் ஆட்டோகிராப் போட்ட சிவகார்த்திகேயன்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன.

இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Advertisement

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. என் நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் குட்டி ரசிகர்களிடம் டி-சர்ட்டில் தல தோனி ஸ்டைலில் ஆட்டோகிராப் போட்டுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in