CINEMA
மாரி செல்வராஜ் யார்…? அவர் எப்படி இயக்குனர் ஆனார்….? நடிகர் சிவகார்த்திகேயன் பளீச்…!!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வாழை. தன்னுடைய சிறுவயது வாழ்க்கை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி உள்ளார். இந்த படத்திற்கு சந்தோச நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையடுத்து படத்தின் பிரீ ரிலீஸ் விழாவானது சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வீடியோ மூலமாக பேசிய சிவகார்த்திகேயன் , வாழ்க்கையில் நடந்த விஷயம் என்பதால் ஒரு சந்தோசமான விஷயத்தை தாண்டி அவர் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய நிகழ்வை இந்த படத்தில் காட்டியிருக்கிறார்.
எளிய மக்களின் வலி, வேதனை, கண்ணீர், சந்தோசம், சிரிப்புகளை அவர்கள் வாழ்க்கையை பதிவு செய்யும்போது அந்த சினிமா அழகாக இருக்கிறது. அதேபோல வாழை படத்திலும் மாரி செல்வராஜ் அவருடைய வாழ்க்கையில் நடந்த சந்தோசமான தருணங்கள் மிக முக்கியமான நிகழ்வுகளை கூறியுள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு ரொம்ப பிடித்த படமாக வாழை அமைந்துள்ளது. மாரி செல்வராஜ் யார்? அவர் வாழ்க்கை என்ன? அவர் என்னென்ன விஷயங்களை கடந்து இன்றைக்கு இயக்குனர் ஆனார்? என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்த படம் ஒரு வாய்ப்பாக இருக்கும்.. இந்த படம் விருதுகளை வாங்கும் என்று நம்பிக்கை உள்ளதாக பேசி உள்ளார்