LATEST NEWS
பிரபல நடிகை பேசும்போது தொந்தரவு செய்த கணவரை அடித்த தீபிகா !.. முத்தமிட்டு சமாதானப்படுத்திய நடிகர் ?..

பாலிவுட் நடிகை பேசும்பொழுது தொந்தரவு செய்த கணவனும் ,நடிகையை சமாதானம் செய்வதற்காக முத்தமிட்ட நடிகரும் . சினிமாவில் நடிகை, நடிகர்கள் காதலித்து வருவது தற்போது சகஜமாகி விட்டது. அதுவும் சீனியர் நடிகர்கள் காதலித்து திருமணமும் செய்து வருகிறார்கள். அந்தவகையில் பாலிவுட்டின் டாப் நடிகர் நடிகையாக இருப்பவர்கள் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே.
சமீபத்தில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இந்தியாவின் பிரபல ஜோடிகளாக வளம் வருகிறார்கள். எங்கு சென்றாலும் இவர்களின் ஜோடியை பார்த்து வியந்து பார்க்காதவர்கள் யாரும் இல்லை. விருதுவிழாவிற்கு சென்றாலும் இவர்கள் காட்டும் பாசத்தை பார்ப்போர் இவர்களை போல் தான் கணவன் – மனைவி இருக்க வேண்டும் என்பார்கள். சமீபத்தில் இந்திய ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
இதில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஆலியா பட், மனோஜ் பாஜ்பே, ஆயுஷ்மான் குர்ரா, பார்வதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.தொகுப்பாளினி அனுபாமா சோப்ரா நடிகை ஆலியா பட்டிடம் கேள்வி கேட்டு அதற்கு பதிலளித்தார். அப்போது நடிகையை ரன்வீர் சிங் குறும்புத்தனமாக இடையில் பேசி கலாய்த்தார். இதை பார்த்த அவரது மனைவி தீபிகா அவரை காலில் அடித்துள்ளார். இதற்கு ரன்வீர் யோசிக்காமல் அவரது தோள்பட்டையில் முத்தம் கொடுத்துள்ளார். பொது இடத்தில் இப்படி கணவர் – மனைவி தங்களை விட்டு கொடுக்காமல் இருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.