CINEMA
நான் ஒரு பொம்பள ரவுடி…. நிறைய பேரை அடிச்சிருக்கேன்…. உண்மையை உடைத்து பேசிய நடிகை டிஸ்கோ சாந்தி…!!

70ஸ் இளசுகளை கவர்ந்திழுத்த கவர்ச்சி கன்னி சில்க்கிற்கு நிகராக ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் டிஸ்கோ சாந்தி. இவரின் நடனம் 80களில் மிகவும் பிரபலம். இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும், நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.வெள்ளை மனசு படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர் ஊமை விழிகள் திரைப்படத்தில் நடனமாடிய இராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல் பிரபலம் ஆனதால், அதன் பின் நிறைய படங்களுக்கு ஒரு பாடலில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றார்.
இறுதியாக 1996-ம் ஆண்டு துறைமுகம் என்னும் படத்தில் தோன்றியிருந்தார் டிஸ்கோ சாந்தி.இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். இவரது கணவர் கடந்த 2013-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். 1996 -ம் ஆண்டு ஸ்ரீஹரி என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு திரை திரைத்துறையிலிருந்து விலகினார்.
இதற்கிடையில் கணவரும் இறந்துவிட்டார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய அவர் நான் ஒரு பொம்பள ரவுடி. என்னை ஷூட்டிங் ஸ்பாட்ல ஆம்பளைன்னு தான் கூப்பிடுவாங்க. நிறைய பேரை நான் அடிச்சிருக்கேன். என்னோட தைரியமான கேரக்டர் தெரிஞ்சி தான் என் கணவர் என்னை கல்யாணம் பண்ணினாரு என்று கூறியுள்ளார்.