LATEST NEWS
“சீக்கிரம் வந்துடுவாரு..” அமைச்சரும் சபாநாயகரும் சொல்வது உண்மைதானா..? ECMO சிகிச்சை பத்தி ஹாஸ்பிடல் மௌனம் காப்பது ஏன்..?!
கடந்த 40 நாட்களாக வி.எஸ்.பாபு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து கடைசியாக கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று மட்டுமே அறிக்கை வெளியிடப்பட்டது. அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளதோடு, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் அவரிடம் இரண்டு முறை தொலைபேசியில் பேசியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
எனினும், அவருக்கு ஈசிஎம்ஓ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து பல்வேறு தரப்பினரிடையே கேள்விகள் எழுந்துள்ளன. எனவே, வி.எஸ்.பாபுவின் உண்மையான உடல்நிலை குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தீவிரமாக எழுந்துள்ளது.
