CRIME
எவ்வளவு தைரியம்..? 16 வயது சிறுமியாக தனியாக அழைத்து சென்று… 17 வயது சிறுவன் செய்த கொடூரம்… அதோடு விடாமல் செல்போனில் வீடியோ எடுத்து… அதிர்ச்சியில் உறைந்த தாய்..!!
உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டம் மனியர் பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன், தனக்கு அறிமுகமான 16 வயது சிறுமியை ஏமாற்றி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்தோடு நிறுத்தாமல், இந்த கொடூர சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை காட்டி, வெளியில் சொன்னால் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என்று அச்சிறுமியைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இந்த அதிர்ச்சியால் மனமுடைந்த சிறுமி, தனக்கு நேர்ந்த துயரத்தை தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டம் மற்றும் பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனைத் தேடிப் பிடித்துக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
