“நான் வாங்கியதும் இல்லை… கொடுத்ததும் இல்ல..!” 500 கோடி ஆடியோ சர்ச்சைக்கு ஏக்நாத் ஷிண்டே அதிரடி பதிலடி! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் வாங்கியதும் இல்லை… கொடுத்ததும் இல்ல..!” 500 கோடி ஆடியோ சர்ச்சைக்கு ஏக்நாத் ஷிண்டே அதிரடி பதிலடி!

Published

on

மகாராஷ்டிராவில் மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக போராடி வரும் மனோஜ் ஜராங்கே, பாஜக-விடம் இருந்து சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேயின் மகனும், எம்பியுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே வழியாக 500 கோடி ரூபாய் தனக்கு அனுப்பப்பட்டதாகக் கூறி பெண் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், தான் யாரிடமும் பணம் கேட்கவும் இல்லை, பெறவும் இல்லை என்று மனோஜ் ஜராங்கே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் சிவசேனா தலைவர் ராம்தாஸ் கடம், பாஜக-வின் ஒரு தரப்பினர் ஏக்நாத் ஷிண்டேவை அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்ட சதி செய்வதாகக் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த பாஜக சட்ட மேலவை குழுத் தலைவர் பிரவீன் தரேகர் மற்றும் பிரசாத் லாட் ஆகியோர், தாங்கள் குற்றம் சாட்டப்படுவதை பாஜக பொறுத்துக்கொள்ளாது என்றும், கடம் “சஞ்சய் ராவத் போல மாறக்கூடாது” என்றும் எச்சரித்தனர். மேலும், ஜராங்கே பாட்டீலுக்கும் பின்னால் இருந்து ஆதரவு அளித்தது யார் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும் தெரிவித்தனர்.

Advertisement

ஏற்கனவே இந்த ஆடியோ விவகாரத்தை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ள நிலையில், ஷிண்டே தலைமையிலான சிவசேனை தரப்பினர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளனர். தேர்தலுக்கு முன்னதாக அரங்கேறியுள்ள இந்தக் குற்றச்சாட்டு மற்றும் ஆடியோ வெளியீடு, ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு இடையே கடுமையான மோதலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in