LATEST NEWS
கர்ப்பமாக இருக்கும் காதல் மனைவிக்கு…. வேற லெவலில் வளைகாப்பு நடத்திய துணிவு பட வில்லன்…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் புகழ் ஜான் கொகன் நடித்திருந்தார்.
இவரின் மனைவி பிரபல நடிகை பூஜா ராமச்சந்திரன். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பூஜா ராமச்சந்திரன்.
இவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிவடைந்தது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக தன்னுடைய நீண்ட நாள் நண்பர் மற்றும் மலையாள நடிகரான ஜான் கோகென் என்பவரை இரண்டாவதாக மறுமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருமே ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட ஜோடி என்பதால் திருமணத்திற்கு பிறகும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து பல புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார்.
கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு உடற்பயிற்சிகளை செய்து அந்த வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்தார்.
இந்நிலையில் பூஜா ராமச்சந்திரன் தனது வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அதில் தனது கணவருடன் மாலையும் கழுத்துமாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை பூஜா ராமச்சந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.