LATEST NEWS
விஜய் டிவியின் அந்த நிகழ்ச்சிக்கு வருகை தரும் ஜி.பி.முத்து…. போட்டோவை பார்த்து செம குஷியான ரசிகர்கள்….!!!!

டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் 11 நாட்கள் மட்டுமே இருந்த இவர் தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து OMG என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து ஜி பி முத்து நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அண்மையில் ஒரு தகவல் வெளியானது.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஜிபி முத்துவுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது. தினந்தோறும் அவரது வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிக்கு ஜிபி முத்து வந்துள்ளார். அதாவது பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கும் அண்டாகாகசம்நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க