LATEST NEWS
என்னங்க சொல்றீங்க, ரஜினிக்கு இப்படி ஒரு பதவியா?.. அவரின் அண்ணன் சத்ய நாராயணன் கொடுத்த பதில்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேசமயம் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் திரைப்படத்திலும் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. மேலும் தலைவர் 170 படத்துக்கு அனிருத் இசை அமைக்க உள்ள நிலையில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மலையாள நடிகை மஞ்சு வாரியார், பகத் பாஸில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ரஜினி இமயமலைக்கு சுற்றுலா சென்று இருந்த போது பல அரசியல்வாதிகளை சந்தித்தார். உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்தித்தபோது அவரின் காலில் விழுந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு கவர்னர் பதவி வரப்போவதாக ஒரு தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக பதில் அளித்த ரஜினியின் அண்ணன், அது ஆண்டவன் முடிவு என்று கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது